in

திருமணம் செய்து வைத்த பூசாரியுடன் புதுப்பெண் ஓட்டம்…!

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் செய்து வைத்த பூசாரியுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷ் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு கடந்த மே மாதம் 7ம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை பூசாரி ஒருவர் நடத்தி வைத்தார்.

இதற்கிடையில் இரண்டு வாரங்கள் ஆன நிலையில் புதுப்பெண் மாயமானதாக சிரஞ் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

விசாரணை நடந்து கொண்டிருந்தபோது இந்த பெண்ணின் குடும்பம் புகார் அளித்த அதே நாளில் புதுப்பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்த பூசாரியும் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் செய்துவைத்த பூசாரியுடனே அந்த புதுப்பெண் ஓட்டம் பிடித்துள்ளார். அவர் ஓடிப்போகும்போது கையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் கொண்டு சென்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த பூசாரிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதும், மேலும் ஒரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த பெண்ணையும் அவர் ஏமாற்றுவதற்காக அழைத்து சென்றுள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Written by Thamilmagan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !

சுத்தியால் தாக்கப்பட்ட காண்டிராக்டர் #நேசமணி யார்