in

மனைவியின் வாட்ஸ்அப் உரையாடல்களை பார்த்த கணவன் செய்த விபரீத செயல்

மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்டிங்காலால் கணவர் ஒருவர், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்டிங்காலால் கணவர் ஒருவர், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் யூகாஸ் என்ற மகன் இருந்துள்ளார்.அர்ஜுனன் டெய்லர் கடை வைத்து நடத்தி வர, மனைவி அலமேலு ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுள்ளார்.</p><p>இந்நிலையில் அலமேலு வாட்ஸ் ஆப்பில் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் நண்பருடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். இதை அர்ஜுனன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அலமேலு அவரது பேச்சை கேட்கவில்லை. இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அலமேலுவின் சாட்டிங்கை அர்ஜுனன் எடுத்துப் பார்த்துள்ளார் இதைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி அலமேலு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டுக்குள் அர்ஜுனனும், அவரது 13 வயது மகனும் தூக்கில் சடலமாகத் தொங்கியுள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அர்ஜுனன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், மனைவி அலமேலு ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து வாட்ஸ்ஆப்பில் சேட்டிங் செய்து வந்தார். இதைப் பலமுறை கண்டித்தும் அவர் என் பேச்சை கேட்கவில்லை.</p><p>ஒருநாள் அவரின் வாட்ஸ்ஆப் சாட்டிங்கை எடுத்துப் பார்த்த போது, அது அளவுக்கு மீறியதாக இருந்தது. மனைவி தடம் மாறியதை உறுதி செய்யும் வகையில் உரையாடல்கள் இருந்ததது. அதனால் எனக்கு வாழ விருப்பமில்லை. என் மகனை தனியே விட்டு செல்ல விருப்பமில்லை.அவனையும் அழைத்து செல்கிறேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார். வாட்ஸ் ஆப் சாட்டிங்கினால் தந்தை, மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Written by Thamilmagan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய காஜல்

கோவிலில் சிறுமியுடன் நெருக்கமாக இருந்த சிறுவன்..! பிறகு நேர்ந்த