in

ரூ.10 ஆயிரத்திற்காக 2 வயது சிறுமி கொடூர கொலை…

உத்தரபிரதேசத்தில் 2 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவருக்கு டுவிங்கிள் சர்மா எனும் 2 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த மே மாதம் 31-ம் தேதி டுவிங்கிள் திடீரென மாயமாகியுள்ளார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் பெற்றோர் காவல் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனையடுத்து குழந்தை முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு தாக்கப்பட்டு கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ஜாகித் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இருவரும் குழந்தையை தாங்கள் கொன்றதாகவும் ஒப்புக் கொண்டனர். குழந்தையின் பெற்றோர் ஜாகித்திடம் பணம் வாங்கியுள்ளனர். அதனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இந்த குழந்தை கடத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார். இந்த சிறுமி கொலைக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பு மக்களும் போராடி வருகின்றனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை? இந்நிலையில் சிறுமியின் கொலை குறித்து பல போலியான தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதாவது, சிறுமியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதாகவும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் மேலும் சிறுமியின் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது ஆனால் இதனை மறுத்துள்ள போலீசார், சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் சிதைக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது கடும் நடவடிக்கை – எச்சரிக்கை சிறுமியின் கண்கள் தோண்டப்படவில்லை என்றும் அவர் மீது ஆசிட் ஊற்றப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்ட வேண்டாம் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Written by Thamilmagan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

தெருவில் உயர்ரக நாய்…! சிறுமியை துடி துடிக்க கடித்த அதிர்ச்சி

காதல் வலையில் வீழ்த்த விஜய் சேதுபதி செய்யும் ரகளை